Wednesday, April 12, 2006

வைகோ-வின் கூட்டணிக்கணக்கு

சென்ற வாரம் திண்ணையில் வெளிவந்த திரு அக்னிபுத்திரனின் கோபால்சாமியா? கோயபல்ஸ்சாமியா? என்ற ஆராய்ச்சிக்கட்டுரை அவர் ஒரு திமுக அனுதாபி என்பதைத்தான் காட்டுகிறதே தவிர உண்மையான ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லை என்பது என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தேர்தலில் வைகோ அவர்கள் திமுக வுடன் கூட்டணிிவைத்து அதனால் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அது வைகோவுக்கும் மதிமுக-விற்கும் அவர்களே அடித்துக்கொண்ட சாவுமணியாகத்தான் இருக்கும்.

இப்போது இருக்கும் தமிழகத்தலைவர்களுல் ஓரளவுக்கு நல்லவராகவும், திறமையுள்ளவராகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கக்கூடியவர் திரு வைகோ அவர்கள்தான். அவர் இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவாவதற்கு அவர் இப்பொது எடுத்த முடிவே சரியானதாகும்.

ஏனெனில் மதிமுக போல் தென்மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும், பாமக போல் வட மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும் கூட்டணிி வைப்பதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற் திமுக கனவு கண்டுகொண்டிருக்கிறது. அவர்கள் கனவு நிஜமானால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அப்படி ஸ்டாலின் முதல்வராக வரும்பட்சத்தில் அது எந்த விதத்தில் வைகோவுக்கும் மதிமுக-விற்கும் நன்மை பயப்பதாக அமையும்?. தன் ஆட்சி மற்றும் அதிகார பலத்தால் தனக்கு பிடிக்காத வைகோவையும், மதிமுக-வையும் அழிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்வார். அது வைகோவிற்கு ஜெயலலிதா செய்த கொடுமையை விட அதிகமாகத்தான் இருக்கும்.அதோடு திமுக-வில் பிழவு ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும். ஸ்டாலின் தலைமையில் திமுக-வும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வும் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும். தமிழக அரசியலில் வைகோ-விற்கு இப்பொது இருக்கும் நிலைகூட வரும்காலங்களில் இல்லாமல் போகலாம்.

ஆனால் ஒருவேளை இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக ஜெயலலிதா தன் தோழமைக்கட்சிகளை வெகு விரைவிலேயே கழட்டி விட்டுவிடுவார். அது எல்லோரும், ஏன் வைகோவும் எதிர்பார்க்கும் ஒரு விசயம்தான். ஆனால் ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக திமுக தலைவர் திரு கருணாநிதி அவ்ரகளின் காலம் நிறைவடையும்பட்சத்தில் அவரின் வாரிசுகளால் திமுக-வில் மிகப்பெரிய பிழவு ஏற்படும். அது திமுக-வை வலுவிலக்கச்செய்யும். உண்மையான திமுக தொண்டர்களும், திரவிடக்கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும் வைகோவின் தலைமையில் மதி,முக-வில் ஜ்க்கியமாவார்கள். தமிழகத்தில் அதிமுக-விற்கு சரியான போட்டியாக மதி,முக வளரும். அடுத்து வரும் தேர்தலில் நம் மக்களின் எகோபித்தா ஆதரவுடன் மதி,முக ஆட்சியில் அமரும். வைகோ தமிழகத்தின் சிறந்தா முதல்வர்களுல் ஒருவராக நிச்சயம் இருப்பார். வைகோவும் அவருடைய கட்சியும் எடுத்த இந்த கூட்டனி முடிவு மேற்கூறிய கருத்துக்களை ஒத்தே எடுக்கப்பட்ட முடிவாக நான் கருதுகிறேன். தொகுதிப்பங்கீட்டுப்ப்ரச்சனையெல்லாம் கூட்டணிியை விட்டு வெளியேற ஒரு காரணமே தவிர அது முக்கிய பிரச்சனையாக இங்கு நான் கருதவில்லை. வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறக்கூடது என்பதுதான் இப்பொது முக்கியமாக மதிமுக கருதுகிறது.

தொலைநோக்குப்பார்வையுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அடுத்த சில ஆண்டுகள் தமிழகம் கஷ்டப்பட்டாலும் வரும் காலங்களில் வைகோ-வின் தலைமையில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

1 Comments:

Blogger கருப்பு said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் அதிமுக அனுதாபிபோல காட்டி இருக்கிறீர்கள். நடுநிலையாக நின்று விமர்சித்தால் இன்னும் சிறப்பு.

2:07 am

 

Post a Comment

<< Home