Wednesday, April 12, 2006

வைகோ-வின் கூட்டணிக்கணக்கு

சென்ற வாரம் திண்ணையில் வெளிவந்த திரு அக்னிபுத்திரனின் கோபால்சாமியா? கோயபல்ஸ்சாமியா? என்ற ஆராய்ச்சிக்கட்டுரை அவர் ஒரு திமுக அனுதாபி என்பதைத்தான் காட்டுகிறதே தவிர உண்மையான ஆராய்ச்சிக்கட்டுரையாக இல்லை என்பது என்னைப்போன்ற நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த தேர்தலில் வைகோ அவர்கள் திமுக வுடன் கூட்டணிிவைத்து அதனால் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அது வைகோவுக்கும் மதிமுக-விற்கும் அவர்களே அடித்துக்கொண்ட சாவுமணியாகத்தான் இருக்கும்.

இப்போது இருக்கும் தமிழகத்தலைவர்களுல் ஓரளவுக்கு நல்லவராகவும், திறமையுள்ளவராகவும், கொள்கைப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கக்கூடியவர் திரு வைகோ அவர்கள்தான். அவர் இந்த முறை இல்லாவிட்டாலும் அடுத்த முறையாவது நிச்சயமாக ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் உருவாவதற்கு அவர் இப்பொது எடுத்த முடிவே சரியானதாகும்.

ஏனெனில் மதிமுக போல் தென்மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும், பாமக போல் வட மாவட்டங்களில் ஒரு வலுவான கட்சியுடனும் கூட்டணிி வைப்பதன் மூலம் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற் திமுக கனவு கண்டுகொண்டிருக்கிறது. அவர்கள் கனவு நிஜமானால் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வராக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். அப்படி ஸ்டாலின் முதல்வராக வரும்பட்சத்தில் அது எந்த விதத்தில் வைகோவுக்கும் மதிமுக-விற்கும் நன்மை பயப்பதாக அமையும்?. தன் ஆட்சி மற்றும் அதிகார பலத்தால் தனக்கு பிடிக்காத வைகோவையும், மதிமுக-வையும் அழிக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்வார். அது வைகோவிற்கு ஜெயலலிதா செய்த கொடுமையை விட அதிகமாகத்தான் இருக்கும்.அதோடு திமுக-வில் பிழவு ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகும். ஸ்டாலின் தலைமையில் திமுக-வும், ஜெயலலிதா தலைமையில் அதிமுக-வும் தான் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும். தமிழக அரசியலில் வைகோ-விற்கு இப்பொது இருக்கும் நிலைகூட வரும்காலங்களில் இல்லாமல் போகலாம்.

ஆனால் ஒருவேளை இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் நிச்சயமாக ஜெயலலிதா தன் தோழமைக்கட்சிகளை வெகு விரைவிலேயே கழட்டி விட்டுவிடுவார். அது எல்லோரும், ஏன் வைகோவும் எதிர்பார்க்கும் ஒரு விசயம்தான். ஆனால் ஒருவேளை அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்பாராதவிதமாக திமுக தலைவர் திரு கருணாநிதி அவ்ரகளின் காலம் நிறைவடையும்பட்சத்தில் அவரின் வாரிசுகளால் திமுக-வில் மிகப்பெரிய பிழவு ஏற்படும். அது திமுக-வை வலுவிலக்கச்செய்யும். உண்மையான திமுக தொண்டர்களும், திரவிடக்கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும் வைகோவின் தலைமையில் மதி,முக-வில் ஜ்க்கியமாவார்கள். தமிழகத்தில் அதிமுக-விற்கு சரியான போட்டியாக மதி,முக வளரும். அடுத்து வரும் தேர்தலில் நம் மக்களின் எகோபித்தா ஆதரவுடன் மதி,முக ஆட்சியில் அமரும். வைகோ தமிழகத்தின் சிறந்தா முதல்வர்களுல் ஒருவராக நிச்சயம் இருப்பார். வைகோவும் அவருடைய கட்சியும் எடுத்த இந்த கூட்டனி முடிவு மேற்கூறிய கருத்துக்களை ஒத்தே எடுக்கப்பட்ட முடிவாக நான் கருதுகிறேன். தொகுதிப்பங்கீட்டுப்ப்ரச்சனையெல்லாம் கூட்டணிியை விட்டு வெளியேற ஒரு காரணமே தவிர அது முக்கிய பிரச்சனையாக இங்கு நான் கருதவில்லை. வரும் தேர்தலில் திமுக வெற்றிபெறக்கூடது என்பதுதான் இப்பொது முக்கியமாக மதிமுக கருதுகிறது.

தொலைநோக்குப்பார்வையுடன் எடுக்கப்பட்ட இந்த முடிவால் அடுத்த சில ஆண்டுகள் தமிழகம் கஷ்டப்பட்டாலும் வரும் காலங்களில் வைகோ-வின் தலைமையில் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Sunday, April 09, 2006

விஜயகாந்தின் தேர்தல் அறிக்கையும் விமர்சனங்களும்

இந்த தேர்தலிலுக்காக விஜயகாந்த் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்ப்ட்ட எதையும் அவரால் செய்யமுடியாது. அவை எதுவும் சாத்தியமில்லை என்று பல வாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் ஒரு சில கவர்ச்சித் திட்டங்களைத் தவிர்த்து இந்த அறிக்கையில் உள்ள அனேக சலுகைகள் இங்கிலாந்து உட்பட பல வள்ர்ந்த நாடுகளில் நடைமுறையில் உள்ளவைதான். நம் அரசு ஏழையாகவும், அரசை நடத்துபவர்கள் கொழுத்த பணக்காரர்களாகவும் உள்ளதாலேயே நம் நாட்டில் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியாமல் உள்ளது. முறையாக வரி வசூலிப்பதன் மூலம் நம் அரசையும் பணக்கார அரசாகவும், நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆட்சியை நல்லாட்சியாகவும் மாற்ற முடியும். இன்னும் சென்னையில் கொழுத்த பணக்காரர்கள் நடத்தும் எந்த நகைகடையிலும், மற்றும் பல வர்த்தக நிறுவனங்களிலும் ரசீது (வரியுடன் கூடிய) வழங்கபடுவதில்லை. அதிகாரிகளும், ஆளும் வர்க்கத்தினரும் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதை கண்டு கொள்வதுமில்லை. முறைப்படி வரி வசூல் செய்து அரசு வருமானத்தை பெருக்கினாலே இதை விட அதிகமான் பயன்களை மக்களுக்கு அரசு செய்து தரலாம்.

Friday, April 07, 2006

கலர் டிவி கனவுகள்

திமுக-வின் தேர்தல் அறிக்கையில் , அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அணைவருக்கும் வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி வழக்குவோம் என்று கூறியிருக்கிறார்கள். அது எப்படி சாத்தியமோ? இல்லையோ அது பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்ப்டி கொடுப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை சற்று ஆராய்ந்து பாரத்தோமானால் , அதனால் சமூக கேடுதான் வருமே தவிர வேறு எந்த முன்னேற்றமும் ஏற்ப்படபோவதில்லை. 5000 ரூபாய் கலர்-டிவி கொடுத்தால் 100 ரூபாய் கொடுத்து கேபிள் டிவி வாங்க மக்கள் தயங்க மாட்டார்கள் என்ற எண்ண்ம் தான் கருணாநிதியை இப்படி அறிக்கைவிட வைத்துள்ளது. 1000 கோடி ரூபாய் அரசுப்பணத்தில் இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி வழங்கி, மாதம் 200 கோடி ரூபாய் தன் குடும்ப (சன் டிவி) தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரு பொது நலம்தான் இந்த அறிக்கை. வைகோ கேட்டது போல் "ஏன் கேபிள் டிவி இலவசமாக கொடுக்கலாமே?"

டிவி பார்ப்பதால் எந்த பலனும் இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக உண்டு. ஆனல் இவர்கள் ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிகழ்சிகளால் என்ன பலன் என்று பார்த்தோமானால் , பலன் பூஜ்ஜியம் தான். இருக்கும் கொஞ்ச அறிவும் இல்லாமல் மூளை மழுங்கிவிடும் அல்லது தீய எண்ணங்கள் நம்முள் வளர வழிவகுக்கும். இது தான் நல்ல நிகழ்ச்சி, இதுதான் இன்றைய செய்தி என்று இவர்கள் தறும் எந்த நிகழ்ச்சியுமே தரம் இல்லை. இதுபற்றி நான் ஏற்கனவே நான் "ஊடகங்களில் சில கரும்புள்ளிகள" என்ற தலைப்பில் திண்ணையில் எழுதியுள்ளேன்.

http://www.thinnai.com/pl0203066.html

இதைப்படித்தீர்களென்றால் உங்களுக்கு உண்மை விளங்கும். முழுக்க ,முழுக்க வியாபார நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் கருணாநிதி குடும்பத்தால் நம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இருக்குக் சொத்தை காப்பாற்றத்தான் ஆட்சியைப்பிடிக்க இவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்களே தவிர மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. இது அவர்களிம் மத்திய அமைசர்களின் செயல்பாடுகளில் இருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். இதற்காகத்தான் வருவாய்த்துறை, தகவல் தொழில்நுட்பம் , சுற்றுச்சூழல் என வருமானம் வரும் துறைகளாக சண்டைபோட்டு வாங்கினார்கள். இதை இவர்களுக்கு வழங்கியதற்கு பரிசுதான் தொகுதிக்கு 2000 ஓட்டுகூட இல்லாத காங்கிரசுக்கு 48 தொகுதியை கருணாநிதி வழங்கியுள்ளார்.

கார்த்திக் முத்துராமலிங்கத்தேவரின் வாரிசா?

திரைப்பட நடிகர் கார்த்திக் சில நாட்களுக்கு முன்னர் அவர் மீதான பண மோசடி வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று கொண்டிருந்தார். அது போன்ற வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்க, வழக்கு போட்டவர்களை மிரட்ட அவருக்கு ஒரு அரசியல் கட்சியுன் தயவு தேவைப்பட்ட நேரத்தில் அவர் முதல்வர் ஜெயலலிதாவைச்சந்தித்து அதிமுக- வில் சேர முயன்றார். அது சீக்கிரம் நடக்காமல் போகவே, ஒரு அறிமுகமான நடிகர் மற்றும் ஒரு சாதியை சார்ந்தவர் என்கிற ஒரு அடையாளத்துடன் "சரணாலயம்" என்ற ஒரு சாதீய அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அரசியல் கட்சிகளின் பார்வை தன் மீது படர முயற்சி செய்தார். அவர் எதிர்பார்த்தது போலவே தமிழக அரசியலில் அவருக்கு ஒரு இடம் கிடைத்தது. இன்று அவர் பாரம்பரியம் மிக்க "பாரவர்டு பிளாக்" கட்சியின் மாநில தலைவர்.

கார்த்திக்கைப்ப்ற்றி திரையுலகிற்கு மட்டும் அல்ல தமிழகத்ததிற்கே நன்றாக தெரியும் அவர் ஒழுங்கீனத்தின் மொத்த உருவம் என்று. பல நடிகைகளுடன் தவறான உறவு வைத்திருந்தவர். "நடிகையின் கதை"-யின் நாயகனாகவே அவர் இருந்தார். ஏமாற்றிவிட்டு கைவிட்டுவிடலாம் என்றிருந்த ஒருவரை அவர் சார்ந்த மலைவாழ் மக்களின் மிரட்டலுக்காக திருமணம் செய்து கொண்டவர். தன் மனைவியின் தங்கையைகூட விட்டுவைக்காத அவரை தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளாமல் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், நேதாஜி அவர்களுடன் சேர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவரும், சிறந்த சொற்பொழிவாளருமான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருடன் ஒப்பிடுப்பேசுவதும், அவர் பாதுகாத்த கட்சியை இனிமேல் இவர்தான் காக்கப்போகிரார் என்கிற ரீதியில் பேசுவதும் அந்த மாகனை இழிவுபடுதும் செயலாகும்.

அம்பேத்கார், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், காமராஜர் மற்றும் சிதம்பரனார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன் நாட்டிற்கும், தன் மக்களுக்கும் சாதி மதம் பாராது உழைத்தவர்கள். அத்தகைய மகான்களை ஏதோ ஒரு சாதிச்சங்கத்தலைவர் போல ஒரு குறுகிய வட்டதில் அடைத்து அதன் மூலம் அரசியல் லாபமடையப்பார்க்கும் ஒரு சில சமூக விரோத சக்திகளை நம் மக்கள் அடையாளம் கண்டு அப்புறப்படுத்தவேண்டும். அதற்கு இந்த தேர்தல்தான் சரியான தருணம்.

இந்த தேர்தலில் மக்கள் வெரும் குறுகியகால சந்தோசங்களுக்காக தங்கள் விலைமதிப்பில்லாத வாக்குகளை விற்றுவிடாமல் நாட்டின் எதிர்காலத்தையும், நம் மக்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு திறமையுள்ள, தொலைநோக்கு பார்வையுள்ள குறிப்பாக பொது நலனில் அக்கறையுள்ள வேட்பாளர்களை ஆட்சியாளர்களாக தேர்ந்தெடுக்கவேண்டும்.